திருப்பூர் – ஆகஸ்ட் – 23,2021
6 மணி நேரத்தில் அதிரடி வேட்டை?
8 தனிப்படை?
2,கோடி பறிமுதல்
சுற்றி வளைத்தது போலீஸ் 4,பேர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகன் சிவ பிரதீப் என்பவரை மர்ம கும்பல் கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் . திண்டுக்கல்லில் பதுங்கி இருந்தவர்களை 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டையில் ஐஜி சுதாகர் மற்றும் கோவை சரக டி.ஐ.ஜி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோரின் தீவிர நடவடிக்கையில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடையூர் பகுதியில் வசித்து வரும் சிவ பிரதீப் என்பவர் 22 .08.2021 ஆம் தேதி தனக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா காரில் டிரைவர் சதாம் என்பவர் ஓட்ட வீட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது மதியம் சுமார் ஒரு மணி அளவில் வீரசோழபுரம் ரோட்டில் எதிரில் வந்த டாட்டா சுமோ காரில் இருந்து இறங்கி வந்த ஏழு நபர்கள் காரை மறித்து நிறுத்தி சிவ பிரதீப்பை இன்னோவா காரில் திண்டுக்கல் சிறு மலைக்கு கடத்தி சென்றுள்ளனர்
பணம் கேட்டு கொலை மிரட்டல்
அதன்பின்பு மூன்று கோடி ரூபாய் பணம் கொடுக்கவில்லை எனில் சிவ பிரதீப்பை கொன்று புதைத்து விடுவதாக கடத்தப்பட்டவரின் தந்தை ஈஸ்வரமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் ஈஸ்வரமூர்த்தி 3 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச்சென்று கொடுத்தபின் திண்டுக்கல் அவதார் செராமிக்ஸ் கம்பெனி அருகில் கடத்திய நபரை இன்னோவா காருடன் விட்டுவிட்டு பின்தொடர்ந்து வந்த சுமோ காரில் பணத்துடன் தப்பி சென்றதாகவும் 23.08.2021 ஆம் தேதி காங்கேயம் காவல் நிலையம் வந்து சிவ பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் காவல் நிலைய குற்ற எண் 1049/2021 U/s 364 (A) 506 (i) IPC இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது வழக்கு பதிவு செய்த சில மணி நேரங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் இ. கா.ப. வழிகாட்டுதலின் படியும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம்எஸ் முத்துசாமி இ கா பா ஆலோசனையின் படியும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய்.இ.கா.ப., உத்தரவின்படி காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சக்திவேல் 37, அகஸ்டின்45, மற்றும் பாலாஜி 38, ஆகிய 3 பேர் பதுங்கிருந்த போது தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 1,69,50,000 ரூபாய் பணம் பறிமுதல் .இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பசீர்32 என்பவரை கிருஷ்ணகிரியில் கைது செய்து அவரிடமிருந்து 20,44,000 ரூபாய் பணம் பறிமுதல். இவ்வழக்கில் எஞ்சிய மூன்று குற்றவாளிகளை விரைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்