தூத்துக்குடி – ஆகஸ்ட்-30,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 26.08.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அசல் நாகமாணிக்க கல் என்று நினைத்து போலியான கல்லை வழிப்பறி செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை விரைந்து கைது செய்து சொத்துக்களை மீட்ட ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் . முத்துராமன், உதவி ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பொன்முனியசாமி, சந்திரசேகர், நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர் கொடிவேல், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலை காவல்ர் முருகேஷ்வரன், காவலர்கள் விசு மற்றும் டேனியல்ராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 23.08.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து களவுபோன 33பவுன் நகைகளை மீட்ட கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து, நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், காவலர்கள் பாலகிருஷ்ணன், சத்ரியன், கார்த்திக் மற்றும் பெண் காவலர்கள் முத்துலதா, முருகேஸ்வரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 29.08.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட சிலமணிநேரத்தில் எதிரிகளை 2 பேரை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், . மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திருமலைராஜன், செந்தில்குமார் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சல்லூரில் மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு சொந்தமான திருடுபோன இரும்பு வேலிகளை திருடிசென்ற எதிரிகளை கண்டுபிடித்து களவுபோன சொத்துக்களான சுமார் 700 கிலோ இரும்பு கம்பிவேலிகளை மீட்ட செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருத்தையா மற்றும் காவலர் நயினார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 25.08.2021 அன்று தன்னுடன் பணிபுரியும் காவலரின் உறவினரின் அறுவை சிகிச்சைக்கு இரத்ததானம் வழங்கி உயிரை காப்பாற்றிய ஆயுதப்பைட மோட்டார் வாகன பிரிவு முதல் நிலை காவலர் பிலிப் அருள்தாஸ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.