திருநெல்வேலி – ஆகஸ்ட்-28,2021
நெல்லை மாநகரம் பேட்டை பகுதியில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின்படி, நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் , தலைமை காவலர்கள் முருகன் சண்முகநாதன் மகாராஜன் அய்யாபிள்ளை தங்கதுரை மற்றும் பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிகரன் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் இன்று நெல்லை மாநகரம் பேட்டை கருங்காடு கல்லறை தோட்டம் பகுதியில் பதுங்கியிருந்த சிங்கிகுளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா என்பவரை சுற்றி வளைத்து அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, தனிப்படை போலீசாருக்கு நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் பாராட்டுகளை தெரிவித்தார். உடன் டவுன் உட்கோட்ட சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர்விஜயகுமார் கலந்து கொண்டார்