தேனி – ஆகஸ்ட் -15,2021
தேனி மாவட்டம், தேனியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில்
இன்று காலை நடைபெற்ற “75 சுதந்திர தின விழாவில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க. வி முரளிதரன் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் ஆகியோர் தேசிய கொடியினை ஏற்றி காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.அதன் பிறகு தேசிய கொடியின் மூவர்ண கலர் பலூண்களை பறக்கவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆர்.தண்டபாணி, பெரியகுளம் சார் ஆட்சியர்
சே.ஆ. ரிஷப் இ.ஆ.ப., உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்
பீ. கவுசல்யா மற்றும் தேனி மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சித் தலைவர் க. பிரியா, துணைத் தலைவர் ராஜபாண்டியன், மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணிபுந்த மருத்துவர்கள், செவிலியர்கள் , வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை நகராட்சி, நிர்வாக நகர் பகுதி, மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரகவளர்ச்சிதுறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 146 நபர்களுக்கும், மற்றும் காவல்துறையை சேர்ந்த 21நபர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவரும், காவல் கண்காணிப்பாளரும் சேர்ந்து வழங்கி கெளரவித்தனர். மேலும் நாட்டின் விடுதலைக்காக போராடிய, தேனி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை கெளவிக்க்கும் விதமாக அந்த பகுதி வட்டாட்சியர் மூலம் அலுவலர்களை நியமிக்கப்பட்டு, பொன் ஆடை அணிவிக்கப்பட்டன.