81.2 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் சென்னை 15,லட்‌‌‌சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 350,கிலோ குட்கா பறிமுதல் - 5,பேர் கைது சூளைமேடு போலீசாருக்கு கமிஷனர்...

15,லட்‌‌‌சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 350,கிலோ குட்கா பறிமுதல் – 5,பேர் கைது சூளைமேடு போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை – ஆகஸ்ட் -13,2021

காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையாளர் பகலவன் இ.கா.ப. ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் சரக உதவி ஆணையாளர் ரவி அபிராம் அவர்களின் வழிகாட்டுதலில், சூளைமேடு காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மாரீஸ்வரன், தீபா. தமிழ்செல்வி, தலைமை காவலர் ஆனந்த், மு.நி.கா ஹீமாயூன், காவலர் முகேஷ், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா பொருட்களை

ரகசிய தகவல்

விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் சூளைமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் சோதனை செய்து கொண்டிருந்த போது 100 அடி ரோட்டில் ஆம்னி பேருந்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கொண்டுவருவதாக கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த (1) .நடராஜன் ஆ/வ 50, த/பெ சுப்யைா, பாடி, சென்னை-50. (2) முருகன் ஆ/வ 25, தெ/பெ கருப்பையா, கோயம்பேடு, சென்னை-107. (3) பிரபாகர் ஆ/வ 29, த/ பெ ராஜேந்திரன், அரூர், தருமபுரி மாவட்டம், (4) ஆனந்தராஜ் ஆ/வ 37, த/பெ சுந்தர்ராஜ், பம்மல் சென்னை-75. (5) நந்தகோபால் ஆ/வ 31, த/பெ ராஜா, குடியாத்தம் தாலுக்கா, வேலூர் மாவட்டம் ஆகியோரை விசாரணை செய்ய அவர்கள் தங்களது பேருந்து KA 51 AF 1443 Grean line வாகனத்தின் உரிமையாளரின் அனுமதியுடன் கொண்டு வருவதாக தெரிவிக்க அவர்கள் பேருந்தில் கொண்டு வந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய்-6,50,000/ – மதிப்புள்ள சுமார் 150 கிலோ கிராம் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு

5,நபர்‌‌‌கள்‌‌‌ கைது

மேலும் அவர்களை விசாரணையில் மேற்படி எதிரிகள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ரூபாய்-8.50,000/- மதிப்புள்ள சுமார் 200 கிலோகிராம் எடை கொண்ட குட்கா பொருட்களை (மொத்தமாக சுமார் ரூபாய்-15,00,000/- மதிப்பு கொண்ட சுமார் 350 கிலோ கிராம் எடை கொண்ட மற்றும் பேருந்து KA 51 AF 1443 Grean line கைப்பற்றப்பட்டது. எதிரிகள் 1 முதல் 5 நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பேருந்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவர் தலைமறைவாக இருந்து வருகின்றார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சூளைமேடு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் இவ்வழக்கில் பணியாற்றிய அனைவரையும், உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்