விழுப்புரம் – ஆகஸ்ட் -28,2021
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆகிய மூன்று வருடங்களில் சுமார் 500 மொபைல் போன்கள் காணாமல் போயுள்ள நிலையில், இது தொடர்பாக உரிய எல்லைக்குட்பட்ட நிலையங்களில் புகார் மனுக்கள் பெறப்பட்டு, காணாமல் போயிருந்த மேற்கண்ட செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, ஐ.பி.எஸ் ,பேரில் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் காவல் துணை கண்காணிப்பாளர் உமாசங்கர் தலைமையில் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலசிங்கம் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் வீரமணி கிருஷ்ணகுமார், மற்றும் காவலர்கள் இளவரசனீ,மகாமார்க்ஸ்,உதயகுமார், இளங்கோவன் மற்றும் செல்வி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 106 விலை உயர்ந்த ஆன்ராய்டு மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேற்கண்ட மொபைல் போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று கூறி சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி அளித்து சிறப்பித்தார்.