தென்காசி – ஆகஸ்ட் – 18,2021
தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை (20.08.2021) முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையின் கீழ் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 10 துணைக் காவல் கண்காணிப்பாளர் கள், 36 காவல் ஆய்வாளர்கள், 103 சார்பு ஆய்வாளர்கள், 697 சட்டம்&ஒழுங்கு காவலர்கள்,216 ஆயுதப்படை காவலர்கள்,108 ஊர்க்காவல் படையினர்,58 இருசக்கர வாகன ரோந்து படையினர், 10 வீடியோ பதிவாளர் உட்பட 1242 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பது குறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.