திருநெல்வேலி – ஆகஸ்ட் – 31,2021
நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் மாநகர போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் உதவி ஆய்வாளர்கள் பழனி முருகன் , தில்லை நாயகம் ,தனிப்படையை சேர்ந்த தலைமைக்காவலர்.முருகன் நுண்ணறிவு பிரிவு தலைமைக்காவலர் செல்லப்பா மற்றும் போலீசார் ஆகியோர் தீவிரமாக ரகசிய கண்காணிப்பு செய்து வந்த நிலையில் இன்று தச்சநல்லூர் குருநாதன் கோவில் விளக்கு அருகில் வைத்து எதிரி ஆறுமுகம் என்பவர் காரில் கொண்டுவந்த ரூ 81,000/ மதிப்புடைய சுமார் 93 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்த, ஆறுமுகம், மற்றும் சேக் மைதீன் ஆகிய இருவரையும் பிடித்து, காவல் உதவி ஆய்வாளர் தில்லை நாயகம் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் மதுரை ரோடு வடக்கு புறவழிச்சாலை விளக்கில் ஷேக் மைதீன் என்பவர் TVS XL இருசக்கர வாகனத்தில் ரூ 27,000/ மதிப்புடைய சுமார் 30 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இன்று மட்டும் மொத்தம் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டவுன் உட்கோட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 14 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குட்கா புகையிலை என மொத்த எடை சுமார் 160 கிலோ அதன் விலை வெளிச் சந்தை மதிப்பு சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.