கன்னியாகுமரி – ஆகஸ்ட் – 23,2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு புகார்மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார்மனுக்கள் மீது நடவடிக்கையானது மாவட்ட காவல் கண்காணிப்பளார் வெ.பத்ரி நாராயணன் IPS உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பளார் அவர்கள் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் கிரைம் பிரிவு போலீசாரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு
உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.