79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி காவலர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி தலைமையில் யோகா பயிற்சி

காவலர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி தலைமையில் யோகா பயிற்சி

திருநெல்வேலி – ஜீலை – 10,2021

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்ட மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் இன்று(10.07.2021) மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிசில் அவர்கள் தலைமையில் ஆயுதப்படை ஆய்வாளர். டேனியல் கிருபாகரன் அவர்கள் முன்னிலையில் ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் வாழும் கலை யோகா அமைப்பின் பயிற்சியாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் மூலம் காவல்துறையினருக்கு
தியான பயிற்சி, மூச்சு பயிற்சி,ஆசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பயிற்சியின் இறுதியில் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி சிறப்பாக பணி செய்யும்படி ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நிறை குறைகளையும் கேட்டறிந்து, காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேற்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள T-Shirt மற்றும் Shoes ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

இப்பயிற்சியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்