80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி பெண்‌‌‌களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பெண்‌‌‌கள் உதவி மையம் தொடக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌...

பெண்‌‌‌களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பெண்‌‌‌கள் உதவி மையம் தொடக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவங்‌‌‌கி வைத்தார்‌‌‌

திருச்சி – ஜீலை – 09,2021

நமதுநிருபர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெர்களை மானபங்கம் படுத்துதல், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் திருச்சி மாநகரத்தில் செயல்படும் அனைத்து காவல் நிலையங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை கொண்டு “பெண்‌‌‌கள் உதவி மையம்” தொடக்க விழா இன்று காலை கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், இ.கா.ப., தொடங்கி வைத்து பெண்கள் உதவி மையத்தில் பணிபுரியும் பெனர் காவல் ஆளிநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பை ஆரம்பித்து வைத்தார்கள். இதில், பெண் உதவி மையத்திற்கான 24 மணி நேரம் செயல்படும் கட்டனாம் இல்லா தொலைபேசி 112, 181 மற்றும் 1098 என்ற எண்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். மேலும், இவ் உதவி மையத்தில் பெறப்படும் புகார்களை பாதிக்கப்பட்ட பெண்களின் இடத்திற்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை துரிதமாக செய்துமுடிக்க பெண்கள் உதவி மையத்திற்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 16 இரண்டு சக்கர வாகனங்கள் (Honda Activa} மற்றும் 16 அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய மடிகணிளிகள் ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண் காவல் ஆனிநர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கி, “தற்போது காவல் துறையினர் மீது பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் நம்பிக்கை அதிகரித்துவரும் காரணத்தினால், அவர்கள் காவல் நிலையங்களுக்கு நேரடியாக வந்து புகார் அளிக்கின்றனர். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (280) R.சக்திவேல், கூடுதல் காவல் துணை ஆனையர் (CWC) S.வளிதா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமூன்நிஷா, திருச்சி மாநகர காவல் சட்ட ஆலோசகர் ராதா, மகளிர் திட்ட உதவி அலுவலர் .ஜான்பால் ஆண்டனி, தொழிலாளர்துறை ஆய்வாளர் லெட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .அளிதா, குழந்தைகள் நல குழு தலைவர் திருமதி.கமலா, அரசு வாவேற்பு துறை அலுவலர் ஆல்பர்ட் மனோகரன் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர். கிருஷ்ணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளித்தனர். பயிற்சியில் பங்குபெற்ற அனைத்து காவல் ஆளிநர்களும் முனைப்புடன் பயிற்சி பெற்று சிறப்பாக பணிபுரிய இப்பயிற்சி உதவியாக இருந்ததாக தெரிவித்தார்

மேலும், திருச்சி மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்