80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில்  தவறவிட்ட பணத்தை சைபர் க்ரைம் போலீசார் மீட்பு மாவட்ட  எஸ்.பி உரியவரிடம்...

வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில்  தவறவிட்ட பணத்தை சைபர் க்ரைம் போலீசார் மீட்பு மாவட்ட  எஸ்.பி உரியவரிடம் ஒப்படைத்தார்

தூத்துக்குடி – ஜீலை – 17,2021

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் வந்த பணத்தை எடுக்காமல் விட்ட ரூபாய் 10,000/-த்தை, அங்கு அடுத்து வந்த மற்றொரு நபர் எடுத்துச்சென்றதை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து மீட்ட பணத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சம்சுமரைக்காயர் மகன் சம்சுக்கனி (65) என்பவர் கடந்த 07.05.2021 அன்று ஸ்பிக் நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூபாய் 10,000/-தை எடுத்துள்ளார். ஆனால் அந்த பணப் பரிவர்த்தனை முடிவடைவதற்குள் சம்சுக்கனி பணம் வரவில்லை என்று அதே அறையிலிருந்த மற்றொரு இயந்திரத்தில் ரூபாய் 10,000/-ம் எடுத்துச் சென்று விட்டார்.

அவர் வீட்டிற்குச் சென்ற பிறகு செல்போனிற்கு இரு முறை பணம் 10,000/- எடுத்ததாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது, இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்து பலனில்லாததால் கடந்த 10.06.2021 அன்று தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  விரைந்து நடவடிக்கை எடுக்க சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவனுக்‌‌‌கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த ஏ.டி.எம் மையம் மற்றும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும், சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.ல் பணம் யார், யார் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை போலீசார் ஆராய்ந்த விசாரணை செய்ததில், சம்சுக்கனி பணம் வரவில்லை என்று ஏ.டி.எம் இயந்திரத்திலேயே விட்டுச் சென்ற ரூபாய் 10,000/-த்தை, அவருக்கு அடுத்து வந்த நபர் பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் அவரிடமிருந்து அந்தப் பணத்தை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  இன்று அதன் உரிமையாளரான சம்சுகனியிடம் ஒப்படைத்தார்.

பொதுமக்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பணப்பரிவர்த்தனை முழுமையடைந்துவிட்டதா என சரிபார்த்த பின்னரே அங்கிருந்து செல்ல வேண்டும். இதுபோன்று பணம் எடுக்கச் செல்லும்போது யாராவது இயந்திரத்தில் வந்திருந்த பணத்தை எடுக்காமல் விட்டுச் சென்றிருந்தால், அந்த பணத்தை எடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அடுத்தவர் பணத்தை எடுத்துச் சென்றால் அதை கண்டுபிடிப்பதற்கு சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் பல வழிமுறைகள் உள்ளது, யாராலும் தப்ப முடியாது. ஏ.டி.எம் இயந்திரத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்