அரியலூர் – ஜீலை – 30,2021
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 30/07/2021 இன்று காலை 11.00 மணி அளவில் நடைபெற்றது. இதில் Head Quarters கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன் அரியலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் . புண்ணியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. சோலைவனம் அமைப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கூறியதாவது :
போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி தமிழகத்திலேயே அரியலூரில் தான் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ளது இப்பயிற்சி பள்ளியின் மூலம் ஓட்டுநர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. போக்குவரத்தில் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாக உள்ளதால் தான் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. இதுபோன்ற விபத்துக்கள் நாம் தடுக்க முடியும். ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் விபத்தில் இறக்கும் போது அந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. அதிக விபத்து நடப்பதற்கு முக்கிய காரணம் அதிக வேகமும் ஒன்று. கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை முந்தி செல்வதால் தான் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. மேலும் ஓவர்லோடு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் குடிபோதையில் வாகனம் இயக்கக்கூடாது. போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் விபத்துகளை குறைப்பதற்கான முக்கிய காரணங்கள் இருக்கின்றன அனைத்து அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து விபத்துக்கள் மேலும் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வு அடையுமாறு ஓட்டுநர்கள் இடம் கேட்டுக் கொண்டார்கள். விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலும் இந்த போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார் இறுதியாக மரக்கன்று நட்டு வைத்து பசுமையை மீட்டெடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டுமென அறிவுறுத்தினார் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அனைத்து சிமெண்ட் நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கனரக வாகன ஓட்டுநர்கள் 200 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.