85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தேனி குற்றசெயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு

குற்றசெயல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு டி.ஐ.ஜி பாராட்டு

தேனி – ஜீலை -11,2021

கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி

தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன அப்பெண் கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தேனி காவல் நிலைய காவல் ஆய்வாளர்

சுரேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினருக்கும்,

கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக கைது செய்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சீர்மிகு பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் திரு.k.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும், கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான காவல்துறையினருக்கும், மதுரையில் குழந்தை விற்பனை செய்த வழக்கில் தப்பிச்சென்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்த முதல் நிலை காவலர் சரவணன் (GrI-2077), குற்றவாளியை பிடிக்க உதவிய மாவட்ட தனிப்பிரிவு

நாகராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் தேனி,பெரியகுளம் உட்கோட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை, மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த காவல் அதிகாரிகள்,காவலர்‌‌‌களை மற்றும் தனிப்படையினருக்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளையும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் குற்றவாளிகளை விரைவாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்