80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் காவல்துறையினருக்கு கொரனா தடுப்பு பாதுகாப்பு உபகரனங்களை மாவட்ட எஸ்.பி வழங்கினார்

காவல்துறையினருக்கு கொரனா தடுப்பு பாதுகாப்பு உபகரனங்களை மாவட்ட எஸ்.பி வழங்கினார்

கன்னியாகுமரி – ஜீலை – 16,2021

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம், பெங்களூரில் உள்ள Silicon Valley Bank நிர்வாக இயக்குனர் பிரேமில் டென்னிசன் அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு உதவிடும் நோக்கில் 1 வருடத்திற்கு தேவையான முகக்கவசம் மற்றும் கையுறைகள் போன்ற கொரோனா தடுப்பு பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS வழங்கினார். அவற்றினை காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS கொரோனா தடுப்பு பொருட்களை காவலர்களிடம் வழங்கினார் .

மேலும் அவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகுந்த கவனமுடன் பணியில் ஈடுபடவேண்டும் எனவும் , தடுப்பு பணியில் ஈடுபடும் போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் , காவலர்கள் தங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்ள முககவசம் உட்பட பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களை பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் மற்றும் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் .நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்