78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் சென்னை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துசென்ற 3,பேரை மடக்கி பிடித்த போலீசாருக்கு போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌...

கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துசென்ற 3,பேரை மடக்கி பிடித்த போலீசாருக்கு போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ பாராட்‌‌‌டு

சென்னை – ஜீலை -08,2021

சாத்தங்காடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்‌‌‌களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .

நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் ( கா 52866 ) , அஜித் அலி ( ( கா .52871 ) மற்றும் அமிர்தபாண்டியன் ( கா .49567 ) ஆகியோர் கடந்த 05.7.2021 அன்று இரவு நுங்கம்பாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்து , வாகனத்தை சோதனை செய்தபோது , அதில் 1 கத்தி இருந்தது தெரியவந்தது . நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள் , 1.பாலாஜி , (வ / 19) திருவொற்றியூர் 2.முரளி கிருஷ்ணன் , (வ / 19) பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பது தெரிய வந்தது.
மேலும் இந்த 3 நபர்களும் சில மணி நேரத்திற்கு முன்பு சாத்தாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெற்றி விநாயகர் நகர் மற்றும் கெனால் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அப்துல் அஜிஸ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது . குற்றவாளிகளிடமிருந்து 1 செல்போன் , 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த F3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் ( கா 52866 ) , அஜித் அலி ( ( கா .52871 ) , அமிர்தபாண்டியன் ( கா .49567 ) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , இ.கா.ப. , இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் .

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்