திருச்சி – ஜீலை – 26,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று, தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரை சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை இன்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்த சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட கீழே கண்ட 1) .M.நல்லையா, 2) தகிருஷ்ணவேணி. 3) R.சத்யா 4) கோபிநாத், 5) .ஜானகிராமன், 6) S.ஜீவிதா, 7) R.கவிதா, 8) M.பிரசாத், 9) T.நவின்ராஜ். 10) R.ஆதித்யா மற்றும் 11)T.பூவிழிப்ரபா ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், இ.கா.ப..நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி, பொறுப்புள்ள அதிகாரிகளாக நடந்து கொண்டு, எந்தவித சிபாரிசும் இன்றி வருபவர்களுக்கு தக்க உதவிகள் செய்ய வேண்டுமென்றும், நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிய வேண்டும் என்று அறிவுரைகள் கூறி பணியமர்த்தல் ஆணையை வழங்கினார்