திருவாரூர் – ஜீலை – 29,2021
திருவாரூர் தாலுக்கா காவல் சரகம் தியாகராஜ நகர பகுதியை சேர்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன் நேற்று இரவு
தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய நிலையில்
பதட்டமடைந்த பெற்றோர்கள் மாவட்ட
தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இரவு 23.30 மணிக்கு தெரிவித்தனர்.
தகவலறிந்த காவல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் நள்ளிரவில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி சிறுவனை கண்டுபிடிக்கஉத்தரவிட்டார்
அதன் அடிப்படையில்
தேடுதல் பணியில் ஈடுபட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும்ரோந்து காவலர்கள்
திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்துகாவலர்கள் வெளியூர்செல்லதிட்டமிட்டு
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் அருகில் பதுங்கிய சிறுவன் சாய்ராமை அதிகாலை 03.00 மணியளவில் மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட
இரவு ரோந்து அதிகாரிகள்,காவலர்கள் மற்றும் திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்துகாவலர்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர்
அவர்கள் பாராட்டினார்
மேலும் சிறுவனின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார் திருவாரூர் மாவட்ட காவல்துறை