80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி "இலங்கை அகதிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்- போலீஸ் கமிஷனர் ஏற்பாடு...

“இலங்கை அகதிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்- போலீஸ் கமிஷனர் ஏற்பாடு…

திருச்சி – ஜீலை -19,2021

செய்தியாளர்- எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல், பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் SRM மருத்துவ கல்லூரி இணைந்து நடத்தும்
சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கடந்த அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார். அவர்களது குறைகளை கேட்ட மாநகர காவல் ஆணையர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அதன் தொடர்ச்சியாக இன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம்வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் – பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் – SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது நலம், எழும்பியல், தோல், இதயம், வயிறு, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கி சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இம்மருத்துவ முகாமில் திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு.சு.சக்திவேல், பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர்.செல்வம், பதிவாளர் விரிவுரையாளர் கோபிநாத் கணபதி, SRM மருத்துவ கல்லூரி துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியன், SRM இளையோர் செஞ்சிலுவை சங்க நிர்வாகி மருத்துவர் சிவக்குமார், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் சிறப்பு துணை ஆட்சியர் .ஜமுனாராணி,SRM மருத்துவ கல்லூரியை சேர்ந்த 30 மருத்துவர்கள் மற்றும் 20 உதவியாளர்கள் பங்கு பெற்றனர்.
மேற்படி முகாம் திருச்சி மாநகர துணை ஆணையர் மேற்பார்வையில் சமூக இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் மற்றும் சிறப்பு முகாம் வாசிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்