80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் சென்னை தமிழக டி.ஜி.பி உத்தரவால் தென் தமிழக கந்‌‌‌துவட்‌‌‌டி , கட்‌‌‌டபஞ்‌‌‌சாயத்‌‌‌து கும்‌‌‌பல்‌‌‌ கலக்‌‌‌கம்‌‌‌ .....

தமிழக டி.ஜி.பி உத்தரவால் தென் தமிழக கந்‌‌‌துவட்‌‌‌டி , கட்‌‌‌டபஞ்‌‌‌சாயத்‌‌‌து கும்‌‌‌பல்‌‌‌ கலக்‌‌‌கம்‌‌‌ …..

சென்னை – ஜீலை -15,2021

தென்மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி வசூலிப்பவர்கள் கடும் நடவடிக்கை பாயும் எனவும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைலேந்திரபாபு கடந்த 30ம் தேதி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்ட போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து தற்போது தென்மாவட்ட காவல் தலைமையிடங்களுக்கு சென்ற டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அங்கு ஆய்வு நடத்தினார். நேற்று மதுரை மாநகர காவல்துறை மற்றும் தென்மண்டல காவல்துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, தென்மண்டல ஐஜி அன்பு, மதுரை, நெல்லை டிஐஜிக்கள், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி , ராமநாதபுரம் , சிவகங்கை , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

தென்மண்டலத்தில் ரவுடிகள் மோதல் சம்பவங்கள் நடந்தது தொடர்பாக அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம் பிரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்குறிய ஆலோசனைகளை சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு வழங்கினார். மேலும் காவல் பணியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்கள் மாரிமுத்து, காக்கரமுத்து, செந்தில், வெங்கடேஷ் பாபு, சுந்தரமூர்த்தி, கண்ணதாசன், செல்வகுமார் மற்றும் மதுரை மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், குமரகுரு, பாலசுப்பிரமணி, தலைமைக் காவலர்கள் தார்வின், முருகன், பிரகாஷ், ஆனந்த், தலைமை காவலர் ராமர், தலைமை காவலர் ஆசைத்தம்பி, முதல் நிலை காவலர் பிரகாஸ் மற்றும் காவர் நாகேஸ்வாரன் ஆகியோருக்கு தலா ரூ 5 ஆயிரம் வெகுமதி வழங்கி பணியை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார்.

மேலும் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும்பத்திற்கு உதவி தொகையாக ரூ 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை அவரது மகளிடம் வழங்கினார். முன்னதாக மதுரை மாநகர காவல்துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்த டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு மதுரை மாநகர காவல்துறை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது .

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்