அரியலூர் – ஜீலை – 31,2021
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.பா., தலைமையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் இன்று மாலை 01.00 மணியளவில் வாரணவாசி கிராமத்தில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் உதவி ஆய்வாளர் மணிகண்டன் காவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கலந்துகொண்டு சைபர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் வாலிபர்கள் முதியவர்கள் கலந்துகொண்டு சைபர் குறித்து விழிப்புணர்வு அடைந்தனர். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்.