78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி 14,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 1700,கிலோ குட்கா பறிமுதல்

14,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 1700,கிலோ குட்கா பறிமுதல்

தூத்துக்குடி -ஜீலை-12,2021

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் – ஒருவர் கைது – கடந்த 6 மாதங்களில் போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில்ட கைது – இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் . அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் வேல்ராஜ், சிவராஜா தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் . பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று தூத்துக்குடி கருத்தபாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த டாட்டா ஏஸ் மினிலோடு வாகனத்தை ஓட்டி வந்த விளாத்திக்குளம், குளத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (34) என்பவரை மடக்கி, மேற்படி வாகனத்தை சோதனை செய்ததில், அதில் தமிழக அரசால்; தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 50 மூட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் அவரைக் கைது செய்து, அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேலும் தூத்துக்குடி வட்டக்கோவில் அருகே மற்றொரு மினி லாரியில் 37 மூட்டைகள் ஏற்றி விற்பனை செய்வதற்கு வைத்திருப்பதாக அவர் தெரிவித்ததன் அடிப்படையில், தனிப்படையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, அவற்றையும் பறிமுதல் செய்து, அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 1700 கிலோ எடை கொண்ட 2,50,968 பாக்கெட்டுகள் அடங்கிய 87 மூட்டைகளிலிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், அதற்குப் பயன்படுத்திய 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூபாய் 14 லட்சம் ஆகும்.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 219 பேர் கைது செய்யப்பட்டு 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 773 பேர் கைது செய்யப்பட்டு 72000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்