85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தனியார் ஜவுளி நிறுவனத்தில் அமைக்‌‌‌கபட்‌‌‌டுள்‌‌‌ள காவல்துறையின் விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்பும் எல்.இ.டி டிஜிட்டல் போர்டினை மாவட்ட...

தனியார் ஜவுளி நிறுவனத்தில் அமைக்‌‌‌கபட்‌‌‌டுள்‌‌‌ள காவல்துறையின் விழிப்புணர்வு செய்திகளை ஒளிபரப்பும் எல்.இ.டி டிஜிட்டல் போர்டினை மாவட்ட எஸ்.பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தூத்துக்குடி -ஜீலை -14,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சின்னதுரை & கோ இணைந்து தூத்துக்குடியில் உள்ள சின்னதுரை & கோ துணிக்கடை வளாகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வகையில் எல்.இ.டி சுவர் விளம்பர பலகையை (LED Wall Digital Board) புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து திருநங்கைகள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் போர்வைகள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

இதில் கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள் செய்யவேண்டியவைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய விழிப்புணர்வு செய்திகளை குறும்படம், புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையின் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை & கோ உரிமையாளர் ஹரிராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயபிரகாஷ், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முருகப்பெருமாள் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சின்னதுரை & கோ கடை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்