கோயம்புத்தூர் – ஜீலை – 31,2021
கோவை மாவட்டம் ,சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னம் பாளையம் பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவர் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 29.07.2021 அன்று இரவு கந்தசாமி அவரது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் 30.07.2021கந்தசாமி அவரது கடைக்கு சென்று பார்த்தபோது கடையை அடையாளம் தெரியாத நபர் உடைத்து கடையில் இருந்த ரூபாய் 10,499 /- மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக கந்தசாமி சூலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு திறம்பட செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் செல்போனை திருடிச் சென்ற நபரை கைது செய்துள்ளனர். இத்தகு மெச்சத் தகுந்த பணியை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப, இன்று மாவட்டக் காவல் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவலர்கள் ரஞ்சித் குமார் (PC 880), பூபாலன் (PC 1008), ரவி (PC 594), ஆயுதப்படை காவலர் தினேஷ்குமார் (PC 625) மற்றும் ஊர்க்காவல் படை காவல் துறை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் விஜய் ஆகியோரை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.