79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி உயிர்காக்கா குருதி கொடுத்த காவலருக்கு எஸ்.பி பாராட்டு

உயிர்காக்கா குருதி கொடுத்த காவலருக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி – ஜீலை – 15,2021

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு இரத்ததானம் செய்த ஆயுதப்படை காவலர் நாகராஜ் என்பவருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு உடனடியாக காவல்துறையினர் மூலம் இரத்த தானம் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி ஆயுதப்படையில் பல வகை இரத்தப்பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் இரத்த தானம் செய்வதற்கு ஆர்வத்துடன் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணிற்கு அவசரமாக A+ குரூப் ரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்க வந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் அவர்களிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் ஆயுதப்படை 5வது படைபிரிவில் பணியாற்றிய வரும் காவலர் நாகராஜ் என்பவர் ஆர்வத்துடனும், உதவும் எண்ணத்துடனும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இரத்த தானம் செய்தார்.

ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவிய ஆயுதப்படை காவலர் நாகராஜை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று பாராட்டி சான்று மற்றும் பழக்கூடை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இதுபோன்று அவசரமாக இரத்தம் தேவைப்படுபவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு உதவுதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணபிரான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்