80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "பணியின்போது மரணித்த காவலரின் குடும்பத்திற்க்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி ....

“பணியின்போது மரணித்த காவலரின் குடும்பத்திற்க்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி ….

தூத்துக்குடி – ஜீலை -16,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் ஆகியோரது குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதி தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

கடந்த 12.08.2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. தாமோதரன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதே போன்று தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் ராஜேஸ்வரன் 04.12.2020 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது அகால மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (16.07.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் என்பவரின் மனைவி மற்றும் வாரிசுதாரரான வெங்கடேஷ்வரி என்பவருக்கும், மறைந்த முதல் நிலை காவலர் ராஜேஸ்வரன் என்பவரின் தந்தை மற்றும் வாரிசுதாரரான சுடலைமணி என்பவருக்கும் மேற்படி ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கி, அவர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின்போது காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சங்கரன், உதவியாளர் ரமேஷ் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்