சென்னை – ஜீலை – 28,2021
தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவிகள் கார்த்திகா, மதுமிதா, ஜெனிபிளாட்டிலா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர்ஜிவால், இ.கா.ப.,நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை பெருநகரில், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இளஞ்சிறார், சிறுமியர் தொடர்ந்து கல்வி பயிலவும், திறமையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி மற்றும் ஊக்கமளித்து, கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து திகழவும், சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் தகுந்த வழிகாட்டுதலோடு சிறந்து விளங்கவும் 2003ம் ஆண்டு சென்னை பெருநகரில் உள்ள காவல் நிலைய எல்லைகளில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் (Police Boys & Girls club) துவக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் வழிகாட்டுதலின்பேரில், இக்காவல் சிறார் மன்றங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் பராமரிப்பில், சாரண ஆசிரியர் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டும், அவர்களுக்கு தேவையான கல்வி தொடர்பான புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்கான உடைகள், உபகரணங்கள் HCL Foundation மற்றும் டான்பாஸ்கோ அன்பு இல்லம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளித்து, சிறார் மன்ற மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, கண்ணகி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, எண்.3420 என்ற முகவரியில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவி கார்த்திகா, வ/14, த/பெ.ராஜா என்பவர் கடந்த 2 வருடங்களாக கண்ணகி நகர் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்று பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி தேடி தந்திருக்கிறார். கார்த்திகாவின் தந்தை ராஜா இரும்பு வியாபாரமும், தாய் வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். சிறுமியின் அக்கா தர்ஷினி கண்ணகி நகரில் பன்னிரெண்டாம் வகுப்பும் ,அண்ணன் செல்வன் என்பவர் பதினோராம் வகுப்பும் படித்து வருகின்றனர். சென்னை, பட்டாபிராம், TVK Nagar, துரைசாமி தெரு, எண்.10 என்ற முகவரியில் வசிக்கும் .மதுமிதா, த/பெ.பாலாஜி என்பவர் கடந்த 4 வருடங்களாக, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்று பல போட்டிகளில் கலந்து கொண்டு அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார். மதுமிதா BBA இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சைக்கிள் கடை நடத்தி வருகிறார். தாய் இல்லத்தரசியாக உள்ளார். சகோதரி ரம்யா B.com முடித்துள்ளார். சென்னை, அத்திப்பட்டு, கலைவாணர் நகர், பாரதிதாசன் தெரு, எண்.565 என்ற முகவரியில் வசிக்கும் ஜெனிபிளாட்டிலா, வ/16, த/பெ.மைக்கேல்ராஜ் என்பவர் கடந்த 4 வருடங்களாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட்டில் சேர்ந்து நன்கு பயிற்சி பெற்றுள்ளார் . ஜெனிபிளாட்டிலா ஆவடி அரசுமேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார். இவரது தாய் லஸி வங்கியில் டெலிகாலிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். சகோதரிகள் ரெமிஏஞ்சலா பொறியியல் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொரு சகோதரி ரெஜிஃபெமிலா பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தைச் சேர்ந்த மேற்படி கார்த்திகா, மதுமிதா, ஜெனிபிளாட்டிலா ஆகிய மூன்று மாணவிகளும் HCL Foundation மூலம் நியமிக்கப்பட்ட பயற்சியாளர் நியூட்டன் மற்றும் ரெஜித் ஆகியோரிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளனர். மேற்படி மூன்று மாணவிகளும் கடந்த 16.07.2021 அன்று தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் (TNCA) நடத்தப்பட்ட தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கான வீரர்கள் தேர்வில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிபடுத்தினார். 19 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளராக கார்த்திகாவும், ஆல்ரவுண்டராக ஜெனிபிளாட்டிலாவும், 23 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டராக மதுமிதாவும், தேர்வாகியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 3 நபர்களும் TNCA சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவிகள்கார்த்திகா, மதுமிதா, ஜெனிபிளாட்டிலா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப. நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.