80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் ஈரோடு "குழந்தை திருமணங்‌‌‌களை தடுக்க ஈரோடு போலீசார் தீவிரம்...

“குழந்தை திருமணங்‌‌‌களை தடுக்க ஈரோடு போலீசார் தீவிரம்…

ஈரோடு – ஜீலை – 14,2021

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், பாவியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக கொரானா தொற்று ஊரடங்கு காலக்கட்டத்தில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதால் அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றப் பிரிவு தலைமையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள், பெண்காவலர்கள், சைல்டுலைன் அலுவலர்கள்,குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் அலுவலர்கள் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த சமுதாய தொண்டாற்றுபவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு “காக்கும் கரங்கள்” என்ற பெயரில் 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது குழந்தைத் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் அடிக்கடி நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: பெண்களின் திருமணவயது 18 முடிவடைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துதல், இதனை மீறி பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தாலோ, சிறுமிகள் தானாக விருப்பப்படி திருமணம் செய்து கொண்டாலோ திருமணம் செய்து கொண்ட நபர், இருதரப்பினரின் பெற்றோர்கள் மற்றும் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவர் மீதும் குழந்தைகளுக்கெதிரான திருமணத் தடைச்சட்டம் (2006) மற்றும் போக்சோ சட்டும் (2012)-ன் படியும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரியப்படுத்துதல். மேலும் இக்குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வரை அளிக்க போக்சோ சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை எச்சரிக்கை செய்தல்.ஏற்கனவே திருமண ஏற்பாடு செய்து, சைல்டுலைன் மற்றும் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று சிறுமியரையும் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்து தற்போதைய நிலைபற்றி அறிந்து சிறுமியர்களுக்கு படிப்பு மற்றும் இதர உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தல்.இச்சம்பவங்கள் தொடர்பான புகார்கள் இக்குழு மூலம் கண்காணிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தல். மேற்படி குற்றச்செயல்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் 1098 அல்லது 100 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது 9655220100 என்ற எண்ணுக்கோ தகவல் தெரிவிக்கலாம்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்