அரியலூர் – ஜீலை – 31,2021
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.பா., தலைமையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் இன்று மாலை 04.00 மணியளவில் காவலர் புதிய குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட RO WATER PLANT திறப்பு விழா நடைபெற்றது. ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் அவர்கள் முனேற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து RO WATER PLANT- யை
திறந்து வைத்து காவலர் குடும்பங்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கினார் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு செடிகளை வளர்ப்பதற்காக வாங்கி சென்றனர். இதனைத்தொடர்ந்து ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் சோலைவனம் தன்னார்வலர்கள் சார்பில் அமைக்கப்பட்ட குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை திருச்சி மண்டல காவல் துறை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைந்து 250 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பசுமையை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என அறிவுறுத்தினார்
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்