80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி "வாட்ஸ் அப் மூலம் காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு - போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு....

“வாட்ஸ் அப் மூலம் காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு – போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

திருச்சி – ஜீலை – 26,2021

செய்தியாளர் – எஸ்‌.எம்.பாரூக்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலவாதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 25.07.2021 அன்று துறையூர் பேருந்து நிலையத்தில் பெற்றோரைக் காணாமல் ஒரு பெண் பழவியாபாரியின் பாதுகாப்பில் தவித்துக் கொண்டிருந்த நிலையில்‌‌‌ நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த பெரியசாமி (35) மற்றும் பிரேமா தம்பதியரின் 3 வயது மகன் வெற்றிவேலை பத்திரமாக மீட்டெடுத்து சிறுவன் குறித்த தகவலை வாட்ஸ்அப் செயலி மூலம் அனைத்து குழுக்களிலும் பகிர்ந்து சிறுவனின் பெற்றோரை உடனடியாக கண்டறிந்து தகவல் தெரியப்படுத்தினர். விசாரணையில் குழந்தையின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் சமயபுரம் கோவிலுக்கு வந்து விட்டு திரும்பிச் செல்கையில் துறையூர் பேருந்து நிலைவத்தில் தங்கள் குழந்தையை தவற விட்டது கண்டறியப்பட்டது. பின்னர் துறையூர் காவல் நிலையத்திற்கு குழந்தையின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நல்ல முறையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு குழந்தையின் பெற்றோர் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். மேற்படி குழந்தை காணமல் போன சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை அதன் பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைத்த காவலர்களை மேன்மேலும் சிறப்பாகப் பணி புரிய ஊக்குவிக்கும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணாள், இ.காப இன்றைய தினம் மத்திய மண்டன அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட 3 காவலர்‌‌‌களையும் நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டுக்களை தெரிவித்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு நல்‌‌‌ல முறையில் சேவை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்