79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தர்மபுரி திருடு போன குழந்தையை மீட்டு கடத்திய கும்பலை துரிதமாக கைது செய்த போலீசாருக்கு மேற்கு...

திருடு போன குழந்தையை மீட்டு கடத்திய கும்பலை துரிதமாக கைது செய்த போலீசாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி பாராட்டு

தர்மபுரி -ஜீலை – 07,2021

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19.06.2021 மாலினி க/பெ அருள்மணி என்பவருக்குப் பிறந்த ஆண்குழந்தை 20.06.21 அன்று காணாமல் போனது. அது தொடர்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன். ஐ,பி,எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மேற்பார்வையில் தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அவர்கள் விரைவாக செயல்பட்டு குழந்தையை கண்டுபிடித்து, குழந்தையை கடத்திச் சென்ற தஞ்சியா க/பெ ஜான் பாஷா, தஞ்சியாவின் கணவர் ஜான் பாஷா, தஞ்சியாவின் தாயார் ரேஷ்மா மற்றும் பாட்டி பேகம் பீர் ஆகிய நான்கு நபர்களையும் 22.06.2021 அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த குழந்தை கண்டுபிடிப்பு பணியில் தருமபுரி நகர காவல் நிலைய குற்ற எண் 780/2021 சட்டப்பிரிவு 365 இ.த.ச வழக்கினை உடனடியாக பதிவு செய்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை கண்டு பிடித்ததுடன் அதற்கு காரணமான நான்கு நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவல் துறையினரை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர்.ஐ,பி,எஸ்., பாராட்டி சான்றளித்து, வெகுமதி வழங்கி கௌரவித்தார். அப்போது சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி.ஐ.பி.எஸ்,. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.ஐ.பி.எஸ்., அவர்களும் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட தனிப்பிரிவு மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்