76.2 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் சேலம் சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம் – ஜீலை – 30,2021

சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா,இ.கா.ப., உத்தரவின் பேரில் சேலம் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் மோகன்ராஜ் மற்றும் சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்
வேதரத்தினம் ஆகியோர்களின் மேற்பார்வையில் சேலம் மாநகர தெற்கு சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷ், காவல் உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி , சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்,செல்லப்பன் மற்றும் காவலர்கள் வெங்கடேசன்,செந்தில்குமார் தங்கதுரை,சீனிவாசன் ஆகியோர்கள் நேற்று 29.07.2021ஆம் தேதி சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காட்டில் உள்ள PSM லாரி ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்ததில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 7300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதேபோல் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கணேஷ் கல்லூரி அருகில் ஒரு சரக்கு லாரியிலிருந்து பொலிரோ வாகனத்திற்கு சரக்கு மூட்டைகளை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த சேலம் மாநகரம் வடக்கு சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் மற்றும் அவரது ஓட்டுநர் தலைமை காவலர் முனிகுட்டி, அம்மாபேட்டை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் வாகன ஓட்டுநர் தலைமை காவலர் பாண்டியன் ஆகியோர்கள் சந்தேகத்தின் பேரில் மேற்படி வாகனங்களை சோதனை செய்த பொழுது அதில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 2397 கிலோ எடையுள்ள 72 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து தங்களது பணிகளை சிறப்பாக செய்த காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்