தேனி – ஜீலை – 28,2021
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரின் மேல் சிகிச்சைக்கு ஒன்றிணைந்து நிதி திரட்டி உதவித்தொகை வழங்கிய தேனி உட்கோட்ட காவல்துறையினர் வீரபாண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஜோதிராஜ் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.காப., பரிந்துரையின் பேரில் அவரின் மேல் சிகிச்சைக்காக தேனி உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் முழு பங்களிப்புடன் ஒன்றிணைந்து பண உதவிதொகை வழங்கினார்
அந்த உதவிதொகையை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா சிறப்பு சார்பு ஆய்வாளர் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து வழங்கினர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக உதவித் தொகையைப் பெற்றுக் கொண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினர், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண உதவி அளித்த காவல்துறையினருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.