திருவாரூர் – ஜீலை – 29,2021
முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை,
புதுக்காளியம்மன் கோவில்
தெருவில் அமைந்துள்ள தானாஜீ ஆபரண தொழிற்கூடத்தில்கடந்த
07.07.2021 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கதவினைஉடைத்து
உள்நுழைந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைதிருடி சென்றநிலையில்அதுதொடர்பாக
வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை பிடிக்க
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் நேரடி பார்வையில்
தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விரைந்து
விசாரணை செய்து, எதிரியை அடையாளம் கண்டு, வழக்கில்சம்பந்தப்பட்ட
எதிரியான நாமக்கல் மாவட்டத்தினை சேர்ந்த வேலாயுதம் (45/21) என்பவரை
கைது செய்து திருடு போனகிலோ வெள்ளி மற்றும் 08 கிராம்தங்கம்ஆறை
பறிமுதல் செய்து சிறையில்அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட
தனிப்படையினரை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்