கன்னியாகுமரி – ஜீலை – 30,2021
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல் நிலையத்தின் அருகே கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் IPS புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலயத்திற்கான அடிக்கல் நாட்டினார். அவருடன் காவல் அதிகாரிகள், ஆளினார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.