80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவையில் சட்டத்திற்கு புறம்பாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி கடும் எச்சரிக்கை…..

கோவையில் சட்டத்திற்கு புறம்பாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி கடும் எச்சரிக்கை…..

கோயம்புத்தூர் – ஜீலை – 04,2021

மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் குறித்து, தகவல் அளிக்க புகார் எண்ணை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி நாக செல்வரத்தினம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்டுக்காய்) பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவது தடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் (2021) அன்னூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை மற்றும் துடியலூர் போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அத்துடன், அது தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவுட்டுகாய் தயாரிப்பது அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவதும் சட்டப்படி குற்றம் ஆகும், எனவே அதுபோன்று செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது சம்பந்தமாக, பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் 9498181212 என்ற எண்ணிற்கும், 77081 00100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். தகவல்தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ஜ.அன்வர்தீன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் கடந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவுட்டுக்காய் மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதை, தடுக்கும் வகைகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்