78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்‌.பி தலைமையில் ஆலோசனை

பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்‌.பி தலைமையில் ஆலோசனை

தூத்துக்குடி – ஜீலை – 25,2021

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நாளை (26.07.2021) தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இந்த திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா தொற்று இருப்பதால் கடந்த வருடம் எப்படி நடைபெற்றதோ, அதே போன்று இந்த வருடமும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கோவில்களில் சாமி கும்பிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள், தேர் பவனி, சப்பர பவனி போன்றவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கொடியேற்றத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கும் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாளை காலை 7 மணிக்கு மக்கள் பங்களிப்பின்றி கொடியேற்றம் நடைபெறும். இந்த பனிமய மாதா கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 400 காவல்துறையினர் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நாளை காலை 4 மணியிலிருந்து கொடிமரம் இருக்கிற இந்தப் பகுதயில் காலை 8 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது, யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல மற்ற நாட்களில் சாதாரண பூஜைகள், வழிபாடுகள் நடக்கும், அதற்கு குறைந்த அளவு பக்தர்கள் வந்து செல்லலாம். அதே போல் இந்த திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் You- Tube லும் நேரடியாக ஒளிபரப்பப்படும், பக்தர்கள் வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ளலாம். ஆகவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு தந்தை குமாரராஜா, உதவி பங்குதந்தை விமல்சன், மாதா கோயில் பங்கு துணை தலைவர் ஹாரட்லி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் . ஜெயப்பிரகாஷ், வடபாகம் அருள், தாளமுத்துநகர் . ஜெயந்தி, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு அங்கையற்கன்னி உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்