79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி கொரனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி தன்னார்வலர்களுக்கு மாவட்ட எஸ்‌.பி பாராட்டு

கொரனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி தன்னார்வலர்களுக்கு மாவட்ட எஸ்‌.பி பாராட்டு

தூத்துக்குடி – ஜீலை – 01,2021

கொரோனா காலத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவை மனப்பான்மையுடன் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சேவையை பாராட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடியில் கொரோனா காலத்தில் சேவை மனப்பான்மையுடனும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு பகுதியில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணிதிட்ட மாணவ, மாணவியர் 33 பேருக்கு, அவர்களது சேவையை பாராட்டி சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணிதிட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மாணவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர் ஜாய்சன், பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவர்கள் மாரிச்சசெல்வம், சதீஷ், வ.உ.சி கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அகிலேஷ், சுதீஸ் பெருமாள், மாணவி லெட்சுமி பிரியா, ஸ்நேகா, டான்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் ஜோசப் சேவியர் அலேக்ஸ், மூக்கையாராஜ், சேவியர் பள்ளி மாணவர்கள் விக்னேஷ், விஷ்வா, கருணாகரன், ஹரிஹர கோபால், ராஜா, அசோக்குமார், ராமகிருஷ்ணன், மணிகண்டன், ஜோசப் தாமஸ் இன்பெண்ட், போப்ஸ் கல்லூரி மாணவர்கள் ஜெரால்ட் ஜெபதுரை, ரோஷன் ஜெயராஜ், பொன்மாரிச் செல்வம், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர் ஸ்டூவர்ட் டேவிட்சன், ராஜலட்சுமி கல்லூரி மாணவர் கிஷோர்குமார், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நாகேந்திரன், கேட்டரிங் கல்லூரி மாணவர் சுயம்புலிங்கம், செவிலியர் கல்லூரி மாணவர் அழகுமுரளி, இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவர் மாரிச்செல்வம், காமராஜ் கல்லூரி மாணவர்கள் தரணியன், சதீஷ்குமார், சேவியர் கல்லூரி மாணவர் தினேஷ்வரன், ஏபிசி கல்லூரி மாணவி முத்துகல்யாணி ஆகிய 33 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் மாணவர்களாகிய நீங்கள் தான் நாட்டின் வருங்கால தூண்கள், கல்லூரி பருவம் மிக முக்கிய பருவம், இப்பருவத்தில் கல்வி கற்றுக்கொள்வது ஒன்று மட்டுமே உங்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நீங்கள் பெறக்கூடிய பட்டங்கள் தான் உங்களை மிக சிறந்தவர்களாக்கும். நல்ல பழக்க வழக்கங்கள்தான் உங்களை சமுதாயத்தில் சிறந்தவர்களாக எடுத்துகாட்டும் என்று அறிவுரைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி முதல்வர் இம்மானுவேல், நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் தினகரன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் . மேரி ஜெமிதா, சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், சாயர்புரம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மைக்கேல் ராஜ பிரதீஸ் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்