78.5 F
Tirunelveli
Tuesday, December 6, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மெச்சத்‌‌‌ தகுந்த பணி செய்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

மெச்சத்‌‌‌ தகுந்த பணி செய்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

தூத்துக்குடி – ஜீலை – 28,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 13.07.2021 அன்று திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரம் பின்புறம் தண்டவாளம் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கார்களை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து மேற்படி கஞ்சா மற்றும் இரண்டு கார்களையும் கைப்பற்றி எதிரிகளான கேரளாவைச் சேர்ந்த அஸ்வின், ஆசிர், ஷம்னாஸ் மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய் கணேஷ் ஆகிய 4 நபர்களை கைது செய்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் . ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மாரியப்பசாமி, முதல் நிலை காவலர் . சொர்ணராஜ், காவலர்கள் சதானந்தம் மற்றும் பாண்டிதுரை ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் 12 மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்து 10 பவுன் நகைகளை மீட்ட புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமை காவலர் சிவசக்திவேல், முதல்நிலைக் காவலர் கிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சங்கரலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் காணாமல் போன வழக்கில் நாகலாபுரத்தை சேர்ந்த முத்துபிரியா என்பவரை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் பகுதியில் கண்டுபிடித்து நிலையம் கொண்டு வந்த மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கோகிலா, சங்கரலிங்கபுரம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், காவலர் ஜெகன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 21.07.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கண்டுபிடித்து வழக்கின் சொத்துக்களான ரூபாய் 66,000/- மதிப்பிலான 6 செல்போன்களை கைப்பற்றி எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை, தலைமை காவலர்கள் ஞானகுரு, ஆறுமுகநயினார், முதல் நிலை காவலர் தாமஸ் சேவியர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு குடோனில் 5610 லிட்டர் மண்ணெண்ணெய்யை கைப்பற்றி உணவு பாதுகாப்புதுறையிடம் ஒப்படைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், முதல் நிலை காவலர் செல்வகுமார், தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ், காவலர் கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கிறிஸ்டி ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்