74.4 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி கிராம இளைஞர்களுடன் மாவட்ட எஸ்.பி கலந்துரையாடல்

கிராம இளைஞர்களுடன் மாவட்ட எஸ்.பி கலந்துரையாடல்

தூத்துக்குடி – ஜீலை – 25,2021

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர் கிராமத்தில் காவல்துறை சார்பாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் கிராம இளையோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர் கிராம பகுதியிலுள்ள சிவன் கோவில் முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள், கிராம இளைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஓவ்வொரு கிராமத்திற்கும், அந்தந்த கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், அப்பகுதி மக்களுக்கு அவசர காலங்களில் உதவுவதற்கும், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நல்லுறவு ஏற்படுத்துவதற்கும் இம்மாதிரியான கிராம விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தபடுகிறது. மேலும் இளைஞர்கள் கொரோன கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவியது பாராட்டக் கூடிய செயலாகும். கடின உழைப்பும் முயற்சியும் உங்களை சிறந்த மனிதர்களாக்கும். உங்களிடம் கல்வி, ஒழுக்கம், அறிவு இருந்தால் நீங்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சாதனையர்களாக ஆக முடியும். இன்று பல முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பலர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். ஒழுக்கம் உங்களை சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக்கும். இளைஞர்களாகிய நீங்கள் பொது அறிவு மற்றும் வரலாறு சம்மந்தமான புத்தகங்களை படிக்க வேண்டும்.

இளைஞர்கள் யாரும் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் உங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இளைஞர்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகள் காவல்துறையின் மூலம் செய்து தரப்படும். உங்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு பெரியவர்களின் அறிவுரை கேட்டு நீங்கள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வேண்டும் என்றும் கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், வசந்த்குமார்,முனியாண்டி மற்றும் வெள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் மாசானமுத்து இ.கா.ப, வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், மருதூர் மேலகால் விவசாய சங்க தலைவர் திரு. அலங்காரம், வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. குமார்பாண்டியன், ஊர் தலைமை சங்கரபாண்டியன், சொர்ணபாண்டியன், தளவாய் உட்பட பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்; கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்