திருநெல்வேலி – ஜீலை – 25,2021
சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் (ஆண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தை நெல்லை சரக காவல்துறைத் துணை தலைவர் அவர்கள், மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்
தமிழக காவல்துறையில் 2020 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு எதிர்வரும் 26.07.2021 (திங்கள் கிழமை) அன்று நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மொத்தம் 3437 நபர்களுக்கு (ஆண்கள்) நடைபெற உள்ளது. இதில் அடிப்படை உடற்தகுதிகளான ஆண்களுக்கு உயரம், மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டம் போன்றவையுடன் 26.07.2021-ஆம் தேதி உடற்தகுதி தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
உடற்தகுதி தேர்வு நடைபெறும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தையும், அங்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளையும் இன்று நெல்லை சரக காவல்துறைத் துணை தலைவர், பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப., அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப., பார்வையிட்டனர்
மேலும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை வழங்கினார்