80.5 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் சென்னை இருசக்கர வாகனத்தை திருடிசென்றவரை துரத்திபிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

இருசக்கர வாகனத்தை திருடிசென்றவரை துரத்திபிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – ஜீலை – 07,2021

பூந்தமல்லி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற விஜய் என்பவரை கைது செய்த நசரத்பேட்டை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்
நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.ஹரிகிருஷ்ணன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் கே.அஸ்வின்குமார் ஆகியோர் இரவு ரோந்து பணியிலிருந்தபோது, 04.7.2021 அன்று அதிகாலை நசரத்பேட்டை சிக்னல் அருகில் 2 இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, நிற்காமல் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். இவர்களில் விஜய் என்பவரை நசரத்பேட்டை காவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் என்பவரின் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் இவர்கள் பூந்தமல்லி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது.
மற்ற 2 நபர்கள் மாம்பாக்கம், செயின்‌‌‌ட்‌‌‌ கோபின்‌‌‌ நிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அந்த இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படை காவலர் அஸ்வின்குமார் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால், இ.கா.ப.,நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்