80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் சென்னை தண்டனை பெறாத 646,போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் முதல்‌‌‌வரின்‌‌‌ காவல்‌‌‌ பதக்கம் வழங்கி...

தண்டனை பெறாத 646,போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷனர் முதல்‌‌‌வரின்‌‌‌ காவல்‌‌‌ பதக்கம் வழங்கி பாராட்டு

சென்னை – ஜீலை -15,2021

நமதுநிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 646 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவலர் பதக்கங்களை வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 208 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 196 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 74 காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 168 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 646 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று (15.7.2021) மாலை, எழும்பூர், இராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப., (தெற்கு), செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), பிரதீப்குமார், இ.கா.ப., (போக்குவரத்து), திருமதி.தேன்மொழி,இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), ஆகியோர் காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்ளை வழங்க, இன்று வருகை தந்த 597 காவல் ஆளிநர்களுக்கு காவல் அதிகாரிகளால் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இன்று வர இயலாதவர்களுக்கு அவர்களது காவல் நிலையங்கள் மூலம் பதக்கங்கள் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்