அரியலூர் – ஜீலை – 31,2021
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.பா.,தலைமையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் இன்று மாலை 05.00 மணியளவில் பொன்பரப்பி கிராமத்தில் செந்துறை காவல் நிலையம் சார்பாக அமைக்கப்பட்ட பாய்ஸ் கிளப் தொடங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நட்பை மேம்படுத்தும் வகையில் காவல்துறை சார்பாக வாலிபால் போட்டி நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன இடையக்குறிச்சி செந்துறை கொடுக்கூர் பொன்பரப்பி, பொன்பரப்பி குடிக்காடு ஆகிய ஊர்களைச் சார்ந்த அணிகள் கலந்து கொண்டன இறுதிப்போட்டியில் செந்துறை அணியினரும் இடையகுறிச்சி அணியினரும் விளையாடினர் இடையக்குறிச்சி அணி வெற்றி பெற்று முதல் இடத்தைப் பெற்றனர். இப்போட்டியில் நடுவர்களாக ரவி திருமூர்த்தி, செல்வகுமார், அறிவழகன் ,பிரபாகரன், ஆகியோர் பங்கேற்றனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் இருந்தனர்.