கோயம்புத்தூர் – ஜீலை – 26,2021
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2019 -உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற 1)குணா, 2)சௌந்தர்ராஜன், 3)ஆனந்த் குமார், 4)பிரகாஷ், 5)அனிதா, 6)ராஜேஷ் கண்ணன் மற்றும் 7) வனகுமார் ஆகியோர்களுக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.07.2021) கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி இ.கா.ப முன்னிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் தேர்வில் வெற்றிபெற்ற 7 நபர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பணி நியமன ஆணை வழங்கினார்.