விழுப்புரம் – ஜீலை – 29,2021
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் பாண்டியன் இ.கா.பா முன்னிலையில். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா.இ.கா.ப தலைமையில்.
மாவட்டத்தில் நடக்கும் குற்ற வழக்குகளை எவ்வாறு தடுப்பது, பழங்குற்றவாளிகள், சரித்திர பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து குற்றவாளிகளை புலன் வைத்து பிடிப்பது, நிலுவையில் உள்ள வழக்குகளின் எதிரிகளை எவ்வாறு புலண்வைத்து பிடிப்பது, மற்றும் வழக்குகளை விரைவாக முடிப்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பகல் ரோந்து, இரவு ரோந்து பணிகளின் போது காவலர்கள் எவ்வாறு விழிப்புடன் செயல்படவேண்டும் என்று அறிவுரைகளும் ஆலோசனைகளும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் வழங்கப்பட்டது.