80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் 7 லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள 71,செல்‌‌‌போன்‌‌‌கள்‌‌‌ மீட்‌‌‌பு- மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி உரியவரிடம் ஒப்‌‌‌படைத்‌‌‌தார்‌‌‌ .....

7 லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள 71,செல்‌‌‌போன்‌‌‌கள்‌‌‌ மீட்‌‌‌பு- மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி உரியவரிடம் ஒப்‌‌‌படைத்‌‌‌தார்‌‌‌ …..

கன்னியாகுமரி – ஜீலை – 03,2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரம் அவர்கள் தலைமையிலான சைபர் கிரைம் போலீஸார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர் நடவடிக்கையாக சுமார் 7 இலட்சம் மதிப்புள்ள 71 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நபர்களிடம் ஒப்படைத்தார். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 260 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்ட்டு வருகிறது, அதன் படி ஜுன் 01 ம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 56 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 குற்றவாளிகள் கைது செய்யபட்டு 232.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மது விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 01 ம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 190 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து மது, சாராயம். ஊறல் என மொத்தம் 2:511.305 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 01 -ம் தேதி முதல் தற்போது வரை கொலை கொள்ளை திருட்டு வழக்குகளில் ஈடுப்பட்ட நபர்கள், சந்தேக நபர்கள், வழக்கமான குற்றவாளிகள், சமூக அமைதியை தொடர்ந்து கெடுக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்கள் என 121 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நன்னடத்தை பிணை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் பல குற்றவாளிகள் திருந்தி வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்