காஞ்சிபுரம் – ஜீலை – 31,2021
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்கள் கடந்த 07.06.2021 அன்று காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து திருட்டு மற்றும் கொலை கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பலனாக சுமார் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு 24 குற்ற வழக்குகளில் சுமார் 55 சவரன் தங்க நகைகள், 22 கிலோ வெள்ளி பொருட்கள், 10 இரு சக்கர வாகனங்கள் , 1 ஆடி கார் மொத்தம் 1.8 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 109 ரவுடிகள் கைது செய்யப்பட்டும் , 35 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டும் திருந்தி வாழ நினைக்கும் ரவுடிகளுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டும் 246 ரவுடிகளை எச்சரித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களை ஓராண்டிற்கு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .