79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி 15,லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா சிக்கியது 4, பேர் கைது - தனிப்படை போலீசாருக்கு...

15,லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா சிக்கியது 4, பேர் கைது – தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி – ஜீலை-13,2021

திருச்செந்தூரில்‌‌‌ சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் – 4 பேர் கைது – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர்கள் ராஜ்குமார், . இசக்கியப்பன் மற்றும் சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று அடைக்காலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 கார்களை சோதனை செய்ததில், அந்த வாகனங்களில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முஸ்தாபா மகன் ஆசீர் (22), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஹாய்சன் மகன் ஹஸ்வின் (24), கன்னூர் தலைசேரி பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் உம்னாஷ் (29) மற்றும் ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம் கொலுகண்டா பகுதியை சேர்ந்த தாதபாபு மகன் சாய்கணேஷ் (23) என தெரியவந்தது, அவர்கள் மேற்படி கார்களில் 4 மூட்டைகளில் சட்டவிரோதமாக 110 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் 4 எதிரிகளையும் கைது செய்து, அவர்கள் கடத்தி வந்த சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி எதிரிகளை கைது செய்து, 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டு 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 773 பேர் கைது செய்யப்பட்டு 72000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்