80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தென்காசி ஒரே நாளில் 117,வழக்கு மற்றும் 5,பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது

ஒரே நாளில் 117,வழக்கு மற்றும் 5,பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது

தென்காசி – ஜீலை – 18,2021

தென்காசி மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக 117 நபர்கள் மீது வழக்கு பதிவு மற்றும் ஒரே நாளில் 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம், தொடர் கஞ்சா விற்பனை மற்றும் கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பேரில்,
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி S.K.P தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது அலி @ கஞ்சா அலி (31),கீழ பேட்டை பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் பாதுஷா (41) மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் கார்த்திக் @ யமஹா கார்த்திக்(24) ஆகிய மூன்று நபர்கள் மீது தென்காசி காவல் ஆய்வாளர் . பாலமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார்.சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது கோதரி என்பவரின் மகன் முகம்மது மைதீன் என்ற நபர் மீது புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாண்டியராஜ் @ பாஸ்கர் இந்த நபர் மீது ஆய்க்குடி வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக (14.07.2021 – 17.07.2021) வரை குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 117 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காவல் துறையினருக்கு பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்